பஞ்சாபின் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தை தாக்கியதாக பாகிஸ்தான் வெளியிட்ட புகாரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று முறியடித்தார். விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சகலமும் சரியாக உள்ளதை உறுதி செய்த அவர், வீரர்களை நேரில் சந்தித்து பாராட்டினார்.

பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் விமானங்களை தாக்கியதாக பொய் பிரசாரம் செய்தன. இந்த தகவல்களை முழுமையாக மறுக்கும் வகையில் பிரதமர் மோடி ஆதம்பூர் தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.’
ஆப்பரேஷன் சிந்துார்’ எனப்படும் ராணுவ நடவடிக்கையின் பின்விளைவாக பாகிஸ்தான் இவ்வாறு பொய் பிரசாரங்களை வியாபகமாக மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தியா முன்னெடுத்த பதிலடி தாக்குதல்களில் பாகிஸ்தான் தளங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை உலகுக்கு பிரதமர் மோடி எடுத்துக்காட்டியுள்ளார்.
அவருடைய உரையின் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலை மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தெளிவாக வெளியிடப்பட்டன.மோடி பேசியபோது, ‘பாரத் மாதா கீ ஜே’ என்பது போர் கோஷம் அல்ல, அது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் மீது எடுத்த சபதம் என தெரிவித்தார். இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஒருமித்து செயல்பட்டு எதிரிகளுக்கு கடும் பதிலடி அளித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களை இனி பொறுக்க முடியாது என்றும், பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிப்போர்களையும் ஒரே பார்வையில் பார்ப்பதையே இந்தியாவின் நிலைப்பாடாக தெரிவித்தார்.இந்தியாவை தாக்கும் எந்த முயற்சியும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மோடி எச்சரிக்கையாக தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் முயன்ற ஆதம்பூர் தாக்குதல் தோல்வியடைந்ததாகவும் கூறினார்.