பெங்களூரு: விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விநியோகிக்கும் திட்டம் பெலகாவி கோட்ட வேளாண்மைத் துறையின் மானியத்தில் விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் வழங்கும் விழா நேற்று பெலகாவியில் உள்ள ஸ்வர்ண விதான சவுதா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு கருவிகள் வழங்கி பேசிய முதல்வர் சித்தராமையா, மேகதாது திட்டத்திற்கு மத்திய வனத்துறையிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

மத்திய அரசு அனுமதி அளித்தால் நாளை பணியை துவக்குவோம். அதேபோல், மேகதாது, கிருஷ்ணா மேலணை உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட்டு பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய மற்றும் சிறு பாசனத்திற்காக ரூ.25,000 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது.
ஆனால், பத்ரா மேல அணை திட்டத்துக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு விடுவிக்கவில்லை. மாநிலத்தில் அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.