ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலையில் டீசல் என்று சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் லாரியில் இருந்து கொட்டிய டீசலை மக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலையில் டீசல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் பக்கெட் மற்றும் பாட்டில்களில் டீசலை அள்ளிச் சென்றனர்.
சுமார் 29,000 லிட்டர் டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் கூடியிருந்த மக்களை அப்புறபடுத்தி, கிரேன் மூலம் லாரியை தூக்கி நிறுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
டீசல் தீப்பிடித்து எறிய வாய்ப்பு இருந்த நிலையில் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் இவ்வாறு செய்தது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது .