பெங்களூரு: கர்நாடக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை மீது அரசு அவசரமாக முடிவு எடுக்காது என சிவக்குமார் அறிவித்துள்ளார்.

மாநில மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பிப்ரவரி 29, 2024 அன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.