புதுடில்லி: பயணிக்கு அழுக்கான இருக்கை வழங்கிய இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவருக்கு அழுக்கான கறை படிந்த இருக்கையை வழங்கியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. நடப்பாண்டு ஜனவரி 2 ஆம் தேதி பாகுவிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் போது அழுக்கு மற்றும் கறை படிந்த இருக்கை வழங்கப்பட்டதாகக் கூறி பிங்கி என்ற பெண் புகார் அளித்தார்.
இந்த புகாரை டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்வு ஆணையம் விசாரித்தது. இந்நிலையில், குறைபாடுள்ள சேவையால் பயணிக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் மன வேதனைக்கு இழப்பீடாக ரூ.1.5 லட்சம் வழங்க விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்குச் செலவாக ரூ.25,000 செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.