குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வழக்குகளைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கக் கோரி பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாபில் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தலைவர் சர்வன் சிங் பாந்தர் நேற்று கூறுகையில், “இந்த போராட்டத்தில் பஞ்சாப் மக்களும் பங்கேற்க வேண்டும். விவசாயிகளுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும். பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு முன்வரவில்லை. விவசாயிகள் தலைவர் உடல் நலம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த ஜக்ஜித் சிங் தல்லேவால், “தனக்கு ஏதேனும் நேர்ந்தால், மத்திய அரசே பொறுப்பு” என்று அவர் கூறினார்.
பாரதிய கிசான் சங்கத்தின் (ஏக்தா சித்துபூர்) தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள கனாவ்ரி பகுதியில் நவம்பர் 26 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த போராட்டம் நேற்று 21-வது நாளாக நீடித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். அந்த நோட்டீசில், விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.