திருப்பதி: திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் கோப்புகள் எரிந்து சாம்பலானது. ஊழல், முறைகேடு புகார்கள் விசாரணையில் உள்ள நிலையில் இந்த தீ விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், துணைக் கோவில்கள் மற்றும் சாலைப் பணிகள் தொடர்பான கோப்புகள் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்தை கவனித்த பாதுகாப்பு ஊழியர்கள் கட்டிடத்தில் இருக்கும் தானியங்கி தீ அணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இது குறித்துப் பேசிய தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர், தேவஸ்தானத்தின் அனைத்து பைல்களும் இ ஃபைல்களாக சர்வரில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.