திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு ஆயிரக்கணக்கான கோவில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திருமலையில் 24 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள திருமலை, ஆண்டு 365 நாட்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வி.வி.ஐ.பி.க்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கோயிலுக்குச் செல்கின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு மேல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, மத்திய அரசில் அங்கம் வகிக்கும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நேற்று ஐதராபாத் வந்திருந்த அமைச்சர் ராம்மோகன் நாயுடு, “இந்த கோரிக்கை தொடர்பாக விமான போக்குவரத்து துறைக்கு தேவஸ்தானம் பலமுறை கடிதம் எழுதியுள்ளது. இது குறித்தும் பலர் எங்களிடம் பேசியுள்ளனர். எனவே, இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி முடிவெடுப்போம்” என்றார்.