குஜராத்: அடிக்கடி பழுதான ஓலா ஸ்கூட்டரை ஷோரூம் வாசலிலேயே வாடிக்கையாளர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் அடிக்கடி பழுதான ஓலா ஸ்கூட்டரை வாடிக்கையாளர் ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து கொளுத்திய சம்பவம் இணையத்தில் பேசும்பொருளானது.
ஷோரூம் வாசலிலேயே ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. ஓலா ஸ்கூட்டர் பழுதானது குறித்து பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு அந்த வாடிக்கையாளர் செய்துள்ளார்.