புதுடெல்லி: டெல்லியில் 88 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் 1936-ம் ஆண்டு 234 மில்லி மீட்டர் மழை பெய்தது.
அதன் பிறகு தற்போது ஜூன் மாதத்தில் டெல்லியில் 228 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 88 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் பெய்த கனமழையால் டெல்லியின் முக்கிய பகுதிகள் மற்றும் சந்திப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், தெற்கு டெல்லி வசந்த்விஹார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் சந்தோஷ் குமார்யாதவ் (19), சந்தோஷ் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற நபரின் அடையாளம் தெரியவில்லை.
இதையடுத்து டெல்லியில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கட்டடம் கட்டப்பட்டு வரும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால், தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
மீட்பு பணி நடந்து வருகிறது. மழைக்கு நேற்று 5 பேர் உயிரிழந்தனர். நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில், மழையின் பாதிப்பு இன்னும் தொடர்கிறது.