பாட்னா: பழி வாங்கிய பெண் வீட்டார்… பீகார் மாநிலத்தில் திருமண விருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருமணத்திற்கு 100 பேர் மட்டுமே வருவார்கள் என கூறிய மாப்பிள்ளை வீட்டார், திருமண நாளில் 200-க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்து வந்துள்ளனர். இதனால் திருமண ஏற்பாடுகள் சிக்கலில் சிக்கியதால் மணமகளின் தந்தை கடும் ஆத்திரமடைந்தார்.
இதையடுத்து, மாப்பிள்ளை வீட்டாருக்காக பரிமாறப்பட்ட பிரியாணி மற்றும் இனிப்பு உணவுகளில் பேதி மருந்து கலந்ததாக கூறப்படுகிறது.
உணவு சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே பலருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், திருமண மண்டபத்தை விட்டு அருகிலிருந்த நதிக்கரையை நோக்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.