திருவனந்தபுரம்: சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சீனாவில் எச்எம்பிவி தொற்று பரவியுள்ளது என்ற தகவலை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இந்த தொற்று 2001-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளா உட்பட உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. இதற்கு முன் கேரளாவில் இந்த நோய் தொற்று ஏற்பட்டது. கேரள ஆய்வகங்களில் இந்த நோய்த்தொற்றைக் கண்டறியும் வசதிகள் உள்ளன. இந்த நோய் தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.