புதுடெல்லி: வெளிநாட்டு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் விற்பனை செய்யப்படுவதாக வெளியான புகாரின் பேரில் கேரள சைபர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜூலை 06ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 50 நகரங்களில் 70 மையங்களில் நடக்கிறது. இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள தலைநகர் திருவனந்தபுரம் சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.