புதுடில்லி: கடலுக்கடியில்.. இந்தியாவை உலகத்தோடு இணைக்க உள்ளது மெட்டா சமூக இணையதள நிறுவனம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெட்டா கடலுக்கடியில் கேபிள் பதிக்கும் திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளவுள்ளது. 50 ஆயிரம் கிமீ தூரத்துக்கு கடலின் ஆழத்தில் பதிக்கப்படும் இந்த கேபிள் 5 கண்டங்களை இணைக்கிறது.
10 பில்லியன் டாலர் செலவில் உருவாகும் இத்திட்டத்தின் பராமரிப்பு, நிதியுதவியில் பங்களிக்கவுள்ளது இந்தியா.
AI சேவைகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த திட்டம் மோடி- ட்ரம்ப் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.