புது டெல்லி: போர் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவும் நிலையில், அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பொது மக்கள் பாதுகாப்பு விதிகளின்கீழ் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட பதிலடி தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு மாநிலங்கள் அனைத்திற்கும் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.