புதுச்சேரி: புதுச்சேரி உப்பளத்தில் 1992-ம் ஆண்டு இந்திரா காந்தி ஸ்டேடியம் கட்டப்பட்டது. 400 மீட்டர் அகலத்தில் ஓடுதளம், புல் மைதானம், வீரர்கள் தங்கும் இடம், பார்வையாளர் அரங்கு போன்றவை அமைக்கப்பட்டன. கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து ஆகியவற்றுக்கான களங்களும் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக தொடக்கத்தில் பல வீரர்கள் பயிற்சி பெற்று பதக்கங்களை வென்றனர்.
ஆனால் காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு மைதானம் சேதமடைந்தது. பிரதமர் விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் ஆன நிலையிலும், செயற்கை தடம் பயன்பாட்டிற்கு வராததால் கடுமையாக பயிற்சி பெற்ற வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலம் முழுவதும் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன.

எனவே, ஸ்டேடியத்தை சீரமைத்து, பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஓட்டப் பாதையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முதல்வர் ரங்கசாமி உடனடியாக உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கத்துக்கு வருகை தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம், மைதானத்தை புத்துயிர் பெற்று செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.