பாலக்காடு, கேரளா: பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட சுங்கம் சரக பகுதியில் ஜனவரி 7ம் தேதி கேரள வனத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சந்தன மரங்களை கடத்தும் கும்பலை பிடிக்க முயன்றனர். மரங்களை வெட்டி கடத்திய கும்பலை கவனித்த வனத்துறை அதிகாரிகள், அவர்களை துரத்திச் சென்றும் பிடிக்க முடியாமல் தப்பினர்.
சந்தன மரங்கள் கடத்திய குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பரம்பிக்குளம் புலிகள் காப்பக துணை இயக்குநர் சுஜித் மேற்பார்வையில் சுங்கத்துறை வனச்சரக அலுவலர் அஜயன் தலைமையிலான தனிப்படையினர் அறிவியல்பூர்வமாக விசாரணை நடத்தினர்.
இதில், 2023 அக்., 26ல், கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய, திருவண்ணாமலையைச் சேர்ந்த குமார் (30) கைது செய்யப்பட்டார். குமாரிடம் விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை (56), அருள் (29) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றப்பிரிவு திருப்பத்தூர், வேல்பத்தூர் பகுதியை சேர்ந்த திருப்பதியை தேடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தால் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் சந்தன மரங்களை முறையாக பாதுகாப்பதிலும், கையாள்வதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், இந்த தீவிர விசாரணை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.