பாக்பத்: லட்டு பிரசாதம் வாங்க சென்ற போது விபரீதம்… உத்தரபிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்மிக திருவிழாவில் ‘லட்டு பிரசாதம்’ வாங்க சென்ற பக்தர்கள் மீது ,மரத்திலான மேடை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை அறிந்து, காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்துக்கொண்டார்.