சென்னை: நம்முடைய கண்களை சுற்றி கருவளையம் விழுதல், கண்களில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் வயது முதிர்ச்சியின் காரணமாக தான் ஏற்படும். ஆனால் சிலருக்கு வயதிற்கு முன்பே ஏற்படுகிறது. இதனை போக்கி நம்மை இளமை தோற்றத்துடன் மாற்ற உதவும் வீட்டுக் குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து பொடி செய்து சிறிதளவு வேப்ப எண்ணெய் கலந்து கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கண் சுருக்கம் மறையும்.
கற்றாழையுடன் வெள்ளரி சாறு மற்றும் தயிர் கலந்து 10 நிமிடங்கள் சுருக்கம் இருக்கும் இடங்களில் மசாஜ் செய்யுங்கள். இதனை அரைமணி நேரம் கழித்து கழுவி வர சுருக்கம் மறைய ஆரம்பிக்கும்.
ஆலிவ் எண்ணெய் இயற்கையாகவே சருமத்தை இறுக்கும் தண்மை கொண்டது. ஆகவே இரவு தூங்கும் முன் சுருக்கம் இருக்கும் இடத்தில் தேய்த்து சில நிமிடங்கள் மசாஜ் செய்து படுக்க சுருக்கம் மறையும்.
தயிருடன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கண் சுருக்கம் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்யுங்கள். அரைமணி நேரம் கழித்து கழுவி வர சுருக்கம் மறையும்.
பப்பாளி பழத்துடன் தேன் கலந்து சுருக்கமாக உள்ள இடத்தை சுற்றிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர சுருக்கம் மறையும். மஞ்சளுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து சுருக்கம் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர சுருக்கங்கள் மறையும்.