சென்னை: உங்கள் அழகைப் பராமரிக்க ஒவ்வொரு முறையும் பியூட்டி பார்லருக்குப் போக வேண்டும் என்று அவசியமில்லை. ஆரோக்கியமான அழகு உங்களுக்கு கிடைக்க சில யோசனைகள்.
சிறிது நீர்ச்சத்து குறைந்தாலும் கூட, உங்கள் உடம்பு தாங்காது. உதட்டில் வறட்சி, சருமத்தில் லேசான தளர்ச்சி ஏற்படும். இதற்கு எப்போதும் இடம் கொடுக்க வேண்டாம். நீங்கள் ஏ.சி. அறையில் இருக்கின்றால் கூட அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நிறைய தண்ணீரைக் குடித்துக் கொண்டே இரண்டுங்கள். இது உங்கள் மேனியிலும் பிரதிபலிக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடண்ட் உணவுகள் உங்கள் உடம்பில் வியாதி வராமல் தடுக்க உதவும். தோல் சுருக்கங்களிலிருந்தும் உடம்பைப் பாதுகாத்து, வயதைக் குறைவாகக் காட்டவும் உதவும். நல்ல சத்துமிக்க காய்கறிகளை எப்போதும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சத்தான காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது நம் உடம்பின் வனப்பை அதிகரிக்கிறது.
நிறைய ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடம்பில் உள்ள நச்சுப் பொருட்களை அழிக்கலாம். சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி கிடைக்கும் என்பது வாஸ்தவம் தான். ஆனால் இதற்கும் ஒரு அளவு உண்டு. அதிக அளவில் நேரம் வெயிலிலேயே அலைந்து திரிவது நல்லதல்ல. வெயிலில் போக நேர்ந்தால் கூலிங் கிளாஸை மறந்து விடாதீர்கள். உடம்பில் சன்ஸ்க்ரீன் லோஷனையும் தடவிக் கொள்ளுங்கள்.