சென்னை: கண்கள் சோர்வடைந்தால் முகத்தின் அழகு போய்விடும். ஆகவே உங்கள் கண்களை இயற்கையான முறையில் பராமரிக்க உதவும் சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளை கிழங்கு
சிலருக்கு கண்களில் கருவளையம் அதிகமாக இருக்கும். அப்படிபட்டவர்கள் உருளைக்கிழங்கை வட்டமாக கட் பண்ணி கண்களின் மேல் பகுதியில் வைக்கலாம் அல்லது அதன் சாறை எடுத்து பத்து நிமிடம் கண்ணில் வைத்து வந்தால் சுருக்கம், கருவளையம் ஆகியவை குறையும். மேலும் கண் வீக்கத்திற்கு ஒரு முக்கிய தீர்வாக உருளை கிழங்கு உள்ளது.
குளிர்ந்த நீர்
உங்கள் கண்களை தினமும் பலமுறை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது கண்களுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். இந்த குளிர்ந்த நீரை பஞ்சில் முக்கி 10 நிமிடம் கண்ணில் வைத்து எடுத்தாலும் நல்ல தீர்வாக அமையும். இது இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்தி கண்களை தளர்த்தும்.
eyes,beauty,face,potatoes,cold water ,கண்கள்,அழகு,முகம்,உருளை கிழங்கு,குளிர்ந்த நீர்
தேநீர் பைகள்
பயன்படுத்திய தேநீர் பைகளை பிரிட்ஜில் வைத்து விட்டு குளிர்ந்த பிறகு அந்த தேநீர் பைகளை உங்கள் கண்களில் 15 நிமிடங்கள் வைக்கவும். இதனால் கருவளையங்கள் குறையும்.
கற்றாழை
கற்றாழை கண்களுக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் மிகுந்த பலனை தரக்கூடியது. கற்றாழை சாறை ஐஸ் கட்டிகளாக உறையவைத்து கண்களில் வைத்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியை அதிகரித்து பாதுக்காப்பை தரும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளது. இதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது இதை சிறு துண்டுகளாக நறுக்கி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வரை கண்களின் மேல் பகுதியில் வைத்து எடுக்கலாம். இது கண்களுக்கு மிகவும் நல்லது. மேலும் குளிரூட்டிய வெள்ளரிக்காயை ஜூஸ் செய்து கூட கண்களின் மேற்பரப்பில் பூசலாம். இது கண்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.