கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியும் ஆரோக்கிய நன்மைகளும் இரட்டிப்பாகும். இது சுவை மட்டும் அல்ல, பல ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள சிறந்த உணவாகும். தயிரில் புரதம், கால்சியம், புரோபயாடிக்குகள் மற்றும் பல தாதுக்கள் உள்ளதால் உடலை உள்ளிருந்து வலுப்படுத்தும் தன்மை கொண்டது.
தினசரி தயிர் சாப்பிடுவதால் செரிமானம் நன்கு நடைபெறும். குடல் சுகாதாரம் மேம்பட, நல்ல பாக்டீரியாக்கள் உள்ளே சென்று வேலை செய்யும். இதனால் மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகள் குறைகின்றன.

தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற கூறுகள் உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும். குறிப்பாக, ஜலதோஷம் மற்றும் சளி போன்றவற்றை தடுக்கும்.
தயிர் ஒரு நல்ல புரத ஆதாரமாக இருப்பதால், இது தசை வளர்ச்சிக்கும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கிரேக்க தயிரில் இந்த அளவு மேலும் அதிகமாக உள்ளது. இது எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு நல்ல தேர்வாகும்.
தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க, இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த, வளர்சிதை மாற்றத்தை தூண்டும். ஒரு கப் தயிர், நாளாந்திர கால்சியம் தேவையின் பாதியைக் குறைந்தபட்சம் பூர்த்தி செய்யும்.
இது இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். இதில் உள்ள கொழுப்புகள் HDL எனப்படும் நல்ல கொழுப்புகளாக மாற்றமடைவதால், இரத்த அழுத்தம் கட்டுப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறைகின்றன.
இவை எல்லாம் இருந்தாலும், சிலருக்கு தயிர் ஒவ்வாமையாக இருக்கலாம். லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை உள்ளவர்கள், அல்லது பால் புரதத்திற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் தயிரை தவிர்க்கவேண்டும்.
மேலும், சந்தையில் கிடைக்கும் இனிப்பு தயிர்களில் அதிக சர்க்கரை இருப்பதால், அது நீரிழிவு மற்றும் உடல் பருமனை தூண்டக்கூடும். எனவே எப்போதும் சர்க்கரை இல்லாத தயிரையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
தயிர் ஒரு இயற்கையான சூப்பர்ஃபுட் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், உங்கள் உடல்நிலை குறித்து முன் ஆலோசனை இல்லாமல் அதை சீராக எடுத்துக்கொள்வது நல்லது அல்ல.
எனவே, தினமும் ஒரு கப் தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது, குறிப்பாக கோடையில், உடலுக்கு உற்சாகமும் ஆரோக்கியமும் தரும் சிறந்த வழியாகும்.