கோடையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். வெப்பத்தால் ஏற்படும் உடல் வறட்சி, நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை தண்ணீர் மற்றும் இயற்கை பானங்கள் மூலமாக தவிர்க்கலாம். இந்த சூழலில், நம் பாரம்பரியக் கொடை எனக் கூறக்கூடிய நுங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
நுங்கு வெயிலின் தாக்கத்திலிருந்து காக்கும் சக்தி வாய்ந்த பழம். அதில் அதிக அளவு தண்ணீர், நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், வைட்டமின் A, C, B7, K மற்றும் இரும்புச் சத்து ஆகியவைகள் அடங்கியுள்ளன. இது உடலில் நீர்சத்தையைக் கூட்டி, தாகத்தை தணிக்கும் தன்மை கொண்டது.

ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள் என அழைக்கப்படும் நுங்கு, கார்போஹைட்ரேட், ஃபைட்டோநியூட்ரியன்ஸ், கால்சியம் மற்றும் ஃபைபர் ஆகியவற்றைச் சேர்த்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகளை வழங்கி, தசை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் உடல் சூட்டையும் நுங்கு குறைக்கும். இதனால் வெயில் காரணி ஸ்ட்ரோக், வெப்பக் கிளர்ச்சி போன்றவற்றைத் தவிர்க்க முடிகிறது. மேலும், இதன் மருத்துவ பண்புகள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
மலச்சிக்கல், வயிறு மந்தம், குமட்டல் போன்ற கோடைக்கால பிரச்சனைகளை நுங்கு தவிர்க்கச் செய்கிறது. அதில் இருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இயற்கையான சர்க்கரையின் மூலம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் நுங்கு, கோடைக்கால சோர்வில் இருந்து நம்மை விடுவிக்கிறது. தினசரி வேலைகளில் சோம்பேறித் தனம் இல்லாமல் இருப்பதற்கும் இது உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல், நுங்கில் உள்ள 90% தண்ணீர் சருமத்தை ஈரமாக வைத்திருப்பதோடு, வெயிலால் ஏற்படும் தோல் பிரச்சனைகளையும் குறைக்கிறது. அரிப்பு, எரிச்சல், வேர்க்குரு போன்றவைக்கு இது இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
நகரங்களிலும் இப்போது எளிதாக கிடைக்கக்கூடிய நுங்கை வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை சாப்பிடுவதன் மூலம் வெயிலின் தாக்கத்தை எதிர்த்துப் போராட முடியும்.
இனி கோடையில் வெப்பத்தைக் கவலைப்பட வேண்டாம். நுங்கு உங்கள் உடலுக்கும் தோலுக்கும் தேவையான பாதுகாப்பாக இருக்கும்.