அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை நாம் அவசியம் சாப்பிட வேண்டும். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் எனக் கூறுவதற்குப் பின்னால் உள்ள உண்மைகளை அறிந்து, எதையும் அளவாகவே உட்கொள்ள வேண்டும். அதையும் மீறி அதிகமாக உட்கொண்டால் உடலுக்கு தீங்கு உண்டாகும். நாவல் பழமும் இந்த வகையைச் சேர்ந்ததே. குறிப்பாக அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை இப்போது தெரிந்துகொள்வோம்.
கோடை காலம் தொடங்கி பருவமழைக் காலம் முடியும் வரை சந்தையில் அதிகளவு நாவல் பழங்கள் விற்பனை செய்யப்படும். நாவல் பழத்தில் பல மருத்துவ பயன்கள் இருந்தாலும், இதனை அதிகப்படியாக உட்கொண்டால் சில சமயங்களில் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த காரணத்திற்காகவே பலர் இந்த நாவல் பழத்தை சாப்பிட வேண்டாம் எனக் கூறுகிறோம். ஹசாரிபாக்கில் உள்ள சாதர் மருத்துவமனையின் ஆயுஷ் துறையில் பணியாற்றும் டாக்டர் மகரந்த் குமார் (BAMS, பெகுசராயில் உள்ள அரசு ஆயுர்வேதக் கல்லூரி, 24 வருட அனுபவம் கொண்டவர்) கூறுகையில், நாவல் பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. டயாபடீஸ் நோயாளிகளுக்கு இது அருமருந்தாக செயல்படுகிறது.
ஆனால் இந்த பழத்தால் சாப்பிட்டால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என அவர் கூறுகிறார். நாவல் பழத்தை உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதாக கூறப்படுகிறது. ஆகையால் குறைவான ரத்தச் சர்க்கரை அளவு கொண்டவர்கள் உள்ளவர்கள் தவறுதலாக கூட இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இல்லை நாவல் பழ சீசனில் அதை சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது என நினைத்தால், உங்கள் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் குறைந்த அளவு எடுத்துக்கொள்ளுங்கள். கருப்பு நிறம் கொண்ட நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் அதிகளவு உள்ளது. இது நம் சருமத்திற்கு பயனளிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை சாப்பிட்ட சிலரிடம் பக்க விளைவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அவர்கள் முகப்பரு, பருக்கள், சுருக்கங்கள் போன்ற சருமப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாவல் பழத்தை அதிகமாக உட்கொள்வதால் அஜீரணம், வாயு, அஜீரணம், செரிமானமின்மை, மந்தம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும் என்று டாக்டர் மகரந்த் விளக்குகிறார். ஆகவே, தவறுதலாக கூட இந்தப் பழத்தை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். மேலும், நாவல் பழத்தை சாப்பிட்ட உடனே தண்ணீரோ அல்லது பாலோ குடிக்க வேண்டாம். ஏனென்றால் இந்த இரண்டு பொருட்களிலும் வேகமாக வினைபுரிந்து வயிற்றில் பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.