உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வதன் நன்மைகள்:
உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பல ஆய்வுகள் கூறுகின்றன, ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் நடைபயிற்சி செய்வது ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. உணவுக்குப் பிறகு நடைபயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்:
#செரிமானத்தை மேம்படுத்துகிறது:
உணவுக்கு பின் நடைபயிற்சி மேற்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த ஒரு அற்புதமான வழியாகும். PLOS One இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உணவுக்குப் பிறகு நடைபயிற்சி மேற்கொள்வது செரிமான அமைப்பு வழியாக உணவை விரைவாக நகர்த்த உதவுகிறது.
# இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது:
நடைப்பயிற்சி என்பது இதயத்திற்கு உகந்த பயிற்சியாகும், ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் சுவாச பிரச்னையை மேம்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடப்பது இதய நோய் உட்பட பல நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
# சர்க்கரை நோய் கட்டுப்பாடு:
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அல்லது அதிக ஆபத்தில் உள்ளவர்கள் உணவுக்குப் பின் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உணவுக்குப் பின் நடைபயிற்சி செய்வது இன்சுலினை அதிகரிக்கிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
#அசிடிட்டி:
உணவுக்குப் பின் நடைபயிற்சி மேற்கொள்வது, வீக்கம் மற்றும் அசிடிட்டியை தடுக்க உதவுகிறது, ஏனெனில் இது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
# வீக்கம் குறைதல்: உணவுக்குப் பின் மெதுவாக நடைபயிற்சி மேற்கொள்வது செரிமானப் பாதை வழியாக உணவை சீராகச் செல்ல உதவுகிறது. மேலும், வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.