சென்னை: இந்திய சமையலில் உள்ள மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இது உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையையும், மணத்தையும் கொடுக்கிறது. இதிலுள்ள மருத்துவ குணங்களால் பெருங்காயம் “கடவுளின் அமிர்தம்” என பல நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட இதன் மணமானது வெங்காயம் மற்றும் பூண்டுகளின் மணத்தைதான் நியாபகப்படுத்துகிறது. பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என இரண்டு வகை இதில் உண்டு. இந்தியாவில் பொடி மற்றும் துண்டு வடிவத்தில் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். *செரியாமை, பசியின்மையைக் குணப்படுத்்தும். அசுர வளர்ச்சியை வெகுவாகக் குறைக்கும்.
ஐரோப்பிய நாடுகளில் பெருங்காயம் பரவ, அலெக்சாண்டரின் படையே காரணமானதாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. பெர்சியா, ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வணிகர்களால் இந்தியாவில் பெருங்காயத்தின் தாக்கம் அதிகரித்தது. ஃபெருவிக் அமிலம், அம்பெல்லி ஃபெரோன், அஸாரெசினால் போன்ற வேதிப் பொருள்கள் பெருங்காயத்துள் பொதிந்து கிடக்கின்றன.
பெருங்காயம் சினைப்பை ஹார்மோன்களை முறையாக்க உதவுகிறது. பெருங்காயம், கருஞ்சீரகம், இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்டஃப்டு, பூரி வகைகள், வங்காள மக்களின் பாரம்பரியத்தில் இணைந்த ஒன்று. சாளுக்கிய மன்னன் மூன்றாம் சோமஸ்வரனால் எழுதப்பட்ட ‘Mawasollasm’ என்னும் நூலில், அரிசி கழுவிய நீரில் சிறிது புளி, பெருங்காயம், ஏலம், இஞ்சி சேர்த்துச் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த ‘வியாஞசனா’ பானம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்று செல்களின் அசுர வளர்ச்சியை பெருங்காயம் வெகுவாகக் குறைக்கிறது.