தக்காளியானது தினமும் நமது உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் சியை கொடுக்கிறது. இயற்கையாகவே இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் இது வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
1.தக்காளி ஜூஸ் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி நம்மை கேன்சரிலிருந்து காக்கிறது .
2.மேலும் ஆரோக்கியமான தக்காளி ஜூஸில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளது.
3.தக்காளி ஜூஸ் நம்முடைய எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
4.தக்காளி ஜூஸ் எலும்பு மற்றும் எலும்பு திசுக்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
5.தக்காளி சாற்றில் வைட்டமின் கே,உள்ளது .இது எலும்பில் இருக்கக்கூடிய கொலாஜன் அல்லாத முக்கிய புரதமான ஆஸ்டியோகால்சினை வேலை செய்ய உந்துகிறது.
6.தக்காளி ஜூசில் உள்ள ஆஸ்டியோகால்சின் எலும்புகளுக்குள் கால்சியம் மூலக்கூறுகளை கனிமமாக்க உதவுகிறது. இதனால் நம்முடைய எலும்பு அடர்த்தியாக இருக்கும்.
7.தக்காளி பழச்சாறை தொடர்ந்து நாம் குடித்து வரும் பொழுது அது நம்முடைய தோல் செல்களை விரைவில் சரி செய்து ஆரோக்கியம் தருகிறது
8.தக்காளி ஜூஸ் இயற்கையான சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக போராடி நம் ஸ்கின்னை பாதுகாக்கும்.