மனித வாழ்வியலில் தினமும் பழங்களை உட்கொள்வதால் வைட்டமின், தாதுக்கள் ஆக்ஸிஜன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த சத்துக்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு பழத்திலும் உடலுக்கு தேவையான ஒவ்வொரு சத்துகளும் நிறைந்து நன்மை அளிக்கிறது. கலோரிகள் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் உள்ளதால் உடல் பருமனாக உள்ளவர்களை எடையை குறைக்கவும் உதவுகிறது.
வீட்டிலேயே விளைவிக்ககூடிய பழமாகவும், விலை குறைவில் அதிக சத்துக்கள் நிறைந்த பழமாகவும் பப்பாளி உள்ளது. மற்ற பழங்களில் உள்ள சத்துக்களை விட ஏராளமான சத்துக்கள் இதில் நிளைந்துள்ளது. ஒவ்வொரு பழத்தினை உட்கொள்ளுவதால் ஏற்படும் நன்மைகள் போல் பப்பாளி பழம் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி அறிந்துக் கொள்வோம். 18 வகையான சத்துடைய ஒரே பழம் பப்பாளி மட்டுமே. பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால் புற்று நோய் வராமல், கண்களில் எதுவும் குறைபாடுகள் ஏற்படலாம் தடுக்கிறது. உடல் நன்மைக்காக ஊட்டச்சத்து மாத்திரைகள் உண்பதற்கு பதிலாக பப்பாளியினை தினமும் உட்கொள்ளலாம்.
காலை உணவில் பப்பாளியை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டால் உணவினை விரைவில் செரிமானம் செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. நார்சத்து நிறைந்துள்ளதால் நான்கு வாரங்களுக்கு தினமும் உட்கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும். இதயநோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது. செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுத்து, மலச்சிக்கல் ஏற்படுவதையும், தோள்களில் ஏற்படும் சரும அலர்ச்சிகளையும் தடுக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தினை அதிகரிக்க செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகிறது.
பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளதால் காயம் ஏற்பட்ட இடத்தினை சரிசெய்வதுடன், அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படும் தீய பக்க விளைவுகளை இருந்து விடுபடவும் உதவுகிறது.
மேலும், சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை குறைத்து சருமம் பொலிவுபெற உதவுகிறது, கண்பார்வை கோளாறுகளை சரிசெய்கிறது, நரம்புத்தளர்ச்சியினை கட்டுப்படுத்துகிறது, சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. செரிமான சக்தியை மேம்படுத்துகிறது, காலையில் பப்பாளி சாப்பிட்டால் குறைக்கவும் உடல் எடையை பராமரிக்க பயன்படுகிறது. மூட்டுவாத நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. எனவே நோயின்றி வாழ நாள்தோறும் பப்பாளி பழத்தை உட்கொள்ளவேண்டும்.