நமது உடலில் எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் முக்கியமான ஒரு சத்து. வயதுடன் இவைகள் சிதையும் அபாயம் உள்ளது. அதனால் கால்சியம் சப்ளிமெண்ட்கள் அவசியம். ஆனால் அவற்றை எப்போது எடுத்துக்கொள்கிறோம் என்பதும், எதனுடன் எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியம். உடல் ஒரே நேரத்தில் 500 முதல் 600 மில்லிகிராம் வரை மட்டுமே கால்சியத்தை உறிஞ்ச முடியும்.

அதற்குமேல் எடுத்தால் அது வீணாகும்.பலர் காலையில் உணவோடு சப்ளிமெண்ட் எடுப்பதுண்டு. ஆனால் அப்போது டீ, காபி போன்ற காஃபின் பொருட்கள் இருப்பதால் கால்சியம் உறிஞ்சுதலை குறைக்கும். மேலும், கால்சியம் மற்ற சத்துக்களுடன் போட்டியிடுவதால், அது சிறப்பாக வேலை செய்யாது. எனவே, காலையில் எடுத்தால், ஒரு மணி நேர இடைவெளி வைத்து காஃபின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவில் எடுத்தால் எலும்பு பழுதுபார்க்கப்படும் நேரம் என்பதால் அது பயனளிக்கக்கூடும். இரும்புச் சத்து, நார், ஆக்சலேட் உணவுகள் ஆகியவை கால்சியத்துடன் எடுத்தால் அதன் செயல்திறன் குறைகிறது. இதற்காக குறைந்தபட்சம் 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
தீர்மானமாக, 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் தினமும் 1200 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படும் நிலையில், இரவில் எடுத்தால் சிறந்தது. வைட்டமின் D, K2 ஆகியவையும் சேர்த்து எடுத்தால், அது எலும்பு உறுதிக்கு உதவும்.சில நேரங்களில் கால்சியம் சப்ளிமெண்டை இரண்டு நேரத்திலும் – காலை மற்றும் இரவு – சிறிய அளவில் பிரித்து எடுத்தால் கூடுதல் பயனளிக்கும்.