நல்ல தூக்கம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. நமது மூளை இரவில் தூங்கும் போது கழிவுகளை அகற்றி, நினைவுகளைச் சேமித்து, ஆற்றலை மறுசீரமைக்கிறது. ஆனால், வெளிச்சம் உள்ள இடத்தில் தூங்குவது இந்த இயங்குதல்களுக்கு தடையாக இருக்கக்கூடும். குறிப்பாக, இரவில் வெளிச்சத்தில் தூங்கினால், நமது உடல் இயற்கையான 24 மணி நேர உயிரியல் கடிகாரம், சர்க்காடியன் ரிதம் சீராக இயங்காமல், தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.

மெலடோனின் என்பது நமது உடலில் இயற்கையாக உற்பத்தி ஆகும் “தூக்க ஹார்மோன்”. இது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுவதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை தடுக்கும் முக்கியப் பொருள் ஆகும். இரவில் வெளிச்சத்தில் தூங்குவதால் மெலடோனின் உற்பத்தி குறைகிறது, இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும். சில ஆய்வுகள் பெண்களில் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது என்றும் கூறுகின்றன.
இருட்டில் தூங்குவதற்கான சில எளிய வழிகள் உள்ளன. பிளாக்அவுட் கர்டெயின்கள் பயன்படுத்துதல், மொபைல் மற்றும் டிவி போன்ற விளக்குகளைக் காலையில் அணைத்துவைக்கும் பழக்கம், நைட் லைட்கள் தவிர்ப்பது போன்றவை இதில் அடங்கும். முழு இருட்டில் தூங்குவதால் தூக்க தரம் மேம்பட்டு மன அழுத்தம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மற்றும் ஹார்மோன் சமநிலை சீராகும்.
இருட்டில் தூங்குவது உடலின் நலனுக்காக அவசியமானது மற்றும் நம் நாளாந்த வாழ்வின் தரத்தையும் மேம்படுத்துகிறது. உடலின் இயற்கை கடிகாரத்தை மதித்து முழு இருட்டில் சீரான தூக்கத்தை கொண்டிருப்பது நம் ஆரோக்கியத்திற்கான நல்ல முதலீடு ஆகும்.