மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 2 காணொலி கண்காணிப்புக் குழுக்கள், ஒரு காணொலி பார்வைக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நாள் நெருங்குவதால் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து மதுராந்தகம்–செய்யூர் பிரதான சாலை, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர்–சோத்துப்பாக்கம், கருங்குழி–திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா என்பதும் சோதனை செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் பிரசார வாகனங்களிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
