தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 100 முதல் 120 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்ற திமுகவும் – அதிமுகவும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.
அந்த வகையில் வேட்பாளர்களின் தேர்வையும் தொடங்கியுள்ளது . அதிலும் ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு யாருக்கு உள்ளது. வெற்றி வாய்ப்பு இருக்கா .? இல்லையா என சர்வே எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்துள்ளது .
எப்படியும் தேர்தலில் போட்டியிட்டு அடுத்த எம்எல்ஏவாக வந்துவிடலாம் என போட்டி போட்டு விருப்ப மனுக்களை அதிமுக தலைமையிடத்தில் கொடுத்துள்ளனர் .
இதுதொடர்பாக அதிமுக தலைமைஅலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் தங்களுடைய விருப்பமனுக்களை, சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 15.12.2025 முதல் 23.12.2025 வரையிலும், மற்றும் 28.12.2025 முதல் 31.12.2025 வரையிலும் வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
அதன்பேரில், ஏராளமானோர் விருப்பமனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, கழகப்பொதுச்செயலாளர், எடப்பாடிK. பழனிசாமி தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும்என்றுவிருப்பம்தெரிவித்து’ 2,187 விருப்பமனுக்களும்; கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி’, தமிழ்நாடு, புதுச்சேரிமற்றும்கேரளாஉட்பட 7,988 விருப்பமனுக்களும், ஆகமொத்தம் 10,175 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.