சென்னை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டது அரசியல் அரங்கில் பேசும் பொருளாக மாறி உள்ளது. காரணம் என்ன தெரியுங்களா?
ஜெயலலிதாவுடன் பல நேரங்களில் முரண்பட்ட ரஜினிகாந்த், இன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். எப்போதும் பாஜகவுடன் இணக்கம் காட்டும் ரஜினியின் இந்த செயல்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த தேர்தலில் பிரிந்த அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் இணைப்பதில் ரஜினி அணிலாக செயல்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது அரசியல் அரங்கில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் நேரத்தில் இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.