சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு வாபஸ் வாங்கியது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 11,608 பொதுமக்கள் மீது தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம், மேலூர் காவல் நிலையங்களில் பதியப்பட்ட வாக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது
இதில் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெற்றப்பட்டுள்ளன.