புதுடில்லி: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அரசு அமையும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, தமிழ்நாட்டில் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் எனக் கூறியுள்ளார்.
2026-ல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவினர் சந்திப்பும், அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்சாவின் பேச்சும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் தமிழகத்தில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாடு தெரிந்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.