By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எதனால்?
    1 Min Read
    சீனா உடன் நல்ல நட்பை பேணி வருகிறோம்… சொல்வது யார் தெரியுங்களா?
    1 Min Read
    நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு
    1 Min Read
    டூ-வீலர் ஓட்டலாம்… பெண்களுக்கு அனுமதி அளித்த ஈரான்
    1 Min Read
    பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எதனால்?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அமைதியான கடற்கரைக்கு ஒரு சுற்றுலா… பீட்டல் பீச் சென்று வாருங்கள்!
    2 Min Read
    அனைவரையும் ரசிக்க வைக்கும் அகுவாடா பீச்!
    1 Min Read
    குடியரசுத் தலைவர் உரைக்கு இடையூறு… எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
    1 Min Read
    ஆராய்ச்சிக்கு மருந்து தயாரிக்க பரிசோதனை உரிமம் தேவையில்லையாம்
    1 Min Read
    நீதிபதி கீதாமிட்டல் குழு பதவிக்காலம் நீட்டிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சாவூர் மாவட்ட மீனவர் குடும்ப இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி
    1 Min Read
    பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளையும் குணமாக்கும் மாதுளம் பூ!
    1 Min Read
    உதட்டில் வறட்சி ஏற்படாமல் தடுப்பது எப்படி ?
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உணவில் உப்பை குறைப்பது அவசியமுங்க
    1 Min Read
    வாரத்திற்கு 2 முறையாவது கண்டிப்பாக மீன் சாப்பிட வேண்டும்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பொங்கலுக்கு பின் கூட்டணி பற்றி உறுதியான தகவல் : பாஜக நயினார் நாகேந்திரன் தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பொங்கலுக்கு பின் கூட்டணி பற்றி உறுதியான தகவல் : பாஜக நயினார் நாகேந்திரன் தகவல்
அரசியல் செய்திகள்

பொங்கலுக்கு பின் கூட்டணி பற்றி உறுதியான தகவல் : பாஜக நயினார் நாகேந்திரன் தகவல்

Nagaraj
Last updated: January 2, 2026 3:26 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

திருநெல்வேலி: பொங்கலுக்கு பின் கூட்டணி நிலை குறித்து உறுதியான தகவல் வெளியாகும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கலுக்கு பின் கூட்டணியின் நிலை குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவியுடன் ரூ.6 கோடியில் அமையவுள்ள பாலத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகரித்துவிட்டது. கையில் புத்தகம் ஏந்தி கல்வி நிலையங்களுக்கு செல்லும் வயதில் அரிவாள் தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நான் கடிதம் எழுதினேன்.

இதன் மூலம் சட்டப்பிரிவு 356- ஐ பயன்படுத்த போவதில்லை . மாறாக தமிழக மக்களே சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த தயார் நிலையில் உள்ளனர். அதாவது மக்கள் மனதில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான எண்ணத்தை திமுக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி விட்டனர். நிச்சயமாக வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்படும். தேர்தலுக்கு இன்னும் 90 நாட்களுக்கும் அதிகமாக உள்ளன. பொங்கலுக்குப் பிறகு கூட்டணியின் நிலை குறித்து உறுதியான தகவல்கள் அறிவிக்கப்படும்.

வரும் 4-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் ‘தமிழகம் தலைநிமிர தமிழன்’ பயணத்தில் பங்கேற்க இருக்கிறார். மறுநாள் 5-ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அன்றே டெல்லி திரும்புகிறார்.

தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு பிரதமர் வருகை இல்லை. பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைய வேண்டும். இணைவார்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது அதிமுக விவகாரம். ஆனால் இருவரும் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு தமிழக அரசு பணம் எதுவும் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தனியாரிடம் கடன் வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உள்ளனர். தமிழகத்தின் அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு 60 சதவீத நிதியை கொடுக்கிறது. மீதி உள்ள 40 சதவீதம் மட்டுமே மாநில அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நிதி நிர்வாகமும் சரியில்லை நீதி நிர்வாகமும் சரியில்லை

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத சிலர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். அவர்கள் தமிழர் திருநாள் என கூறி தப்பித்துக் கொள்வார்கள். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் மட்டும் தெரிவிக்கும் அவர்கள் போலி மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கின்றனர்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தீபாவளி கொண்டாட வேண்டாம் என தனது கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்களால் அவரும் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

You Might Also Like

எதிர்க்கட்சிகள் கடும் அமளி… பிரதமர் மோடி உரை ரத்து செய்யப்பட்டது

பிரதமருக்கு மணிப்பூர் செல்ல 2 ஆண்டுகள் ஆகிவிட்டது… காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

எம்.எல்.ஏ. பழனியாண்டியை உடனடியாக கைது செய்யுங்கள்… அண்ணாமலை வலியுறுத்தல்

எம்எல்ஏ பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்… ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்

கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு… செங்கோட்டையன் தகவல்

TAGGED:AllianceNainar NagendranPongal gift packagepseudo-secularismகூட்டணிநயினார் நாகேந்திரன்பொங்கல் பரிசுத்தொகுப்புபோலி மதச்சார்பின்மை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

பாகற்காய் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமா?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?