லக்னோ: பிரமோஸ் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பிரமோஸ் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். லக்னோவில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் ஆலையில் முதலாவதாக தயாரிக்கப்பட்ட ஏவுகணைத் தொகுப்பை ஆயுதப் படை பயன்பாட்டுக்காக ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் பேசிய ராஜ்நாத், ஆபரேஷன் சிந்தூரில் நடந்தவை வெறும் முன்னோட்டம் தான் என்றும், பாகிஸ்தானை உருவாக்க முடிந்த இந்தியாவால் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பது அந்நாட்டுக்கு உணர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.