புதுடில்லி: பி.எஸ்.எஃப். இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோரை மத்திய அரசின் நியமனக் குழு அதிரடியாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை இல்லாத நடவடிக்கையாக, எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் நிதின் அகர்வால் மற்றும் துணை இயக்குநர் குரானியாவை மத்திய அரசின் நியமனக் குழு நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவரவர் மாநிலப் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் எல்லையில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்தது வீரர்கள் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் எல்லைப் பகுதிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பு படைகளை சரிவர ஒருங்கிணைத்து செயல்படத் தவறியதால் கேரளாவைச் சேர்ந்த அகர்வாலும் ஒடிசாவைச் சேர்ந்த குரானியாவும் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.