சென்னை: நீட், கியூட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேர்வுகளை முறையாகவும் நேர்மையாகவும் நடத்துவது கல்வித் துறையின் முக்கிய கடமை என்றும், தொடர்ந்து தேர்வு நடத்துவதிலேயே கல்வித்துறை தோல்வியடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்வி அமைச்சகம் முதல் அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயல்கள் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.