சென்னை : திமுகவுக்கு ஸ்டிக்கர் வெறி முற்றி விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
கோர்ட்டால் நியமிக்கப்பட்ட SIT விசாரணைக்குக் கூட கிரெடிட் எடுக்கும் அளவுக்கு திமுகவுக்கு ஸ்டிக்கர் வெறி முற்றிப் போயுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விசாரித்துள்ளார்.
அண்ணா பல்கலை., வழக்கில் FIR பதியாமல் தங்கள் அனுதாபி ஞானசேகரனை காக்க முயன்றது அம்பலமாகியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2026-ல் அதிமுக ஆட்சியமைந்த பிறகு அனைத்து ‘சார்’களும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.