டெல்லி: அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தனி வழக்குப் பதிவு செய்து ஜூன் 2023-ல் கைது செய்து சென்னை புழல் மத்திய சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒய்.பாலாஜி புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதுவரை விசாரணை முடிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் கோரும் கோப்பு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்க இப்போதுதான் ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
எனவே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தது. செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க மனுதாரர் மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனி சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும்.
மேலும், நடுநிலையான அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு 7 மாதங்களுக்குப் பிறகுதான் தமிழக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார், அதுவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு அதை எப்படி எடுத்துக்கொள்வது? என்ன?
இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையா?” என்று கேட்டதற்கு, செந்தில் பாலாஜி மீதான வழக்கின் நிலை குறித்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரணை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறி விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சிறப்பு வழக்கறிஞரை மாற்றுவதற்கான கோரிக்கையை அரசு பின்னர் பரிசீலிக்கலாம்.