சென்னை : திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ 1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
தூத்துக்குடி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் அசையா சொத்துக்கள் முடக்கம். மேலும் சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் சென்னை மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.