சென்னை: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க
உள்ளது. இதை ஒட்டி பணிகளை கவனிக்கும் வகையில், பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மெக்வால், முரளிதர் மோஹேல் ஆகியோரை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இந்தக்குழு விரைவில் தமிழகம் வருகை தந்து பாஜக மாநில நிர்வாகிகளையும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.