தெலுங்கானா: மத்திய அமைச்சரும், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவருமான ஜி. கிஷன் ரெட்டியின் இல்லத்தில் பொங்கல் / சங்கராந்தி கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி, பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கலந்து கொண்டார்.
பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் அறுவடை தொடர்பான திருவிழா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.