By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்து உளவுத்துறையின் முதல் பெண் தலைவர் நியமனம்..!!
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் போர்: தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. டிரம்ப் எச்சரிக்கை..!!
    2 Min Read
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பெண்ணை தாக்கிய ரேபிடோ ஓட்டுநர்… சர்ச்சைக்குள்ளான விவகாரம்
    2 Min Read
    UPI சூப்பர்ஃபாஸ்ட் சேவை..எந்தவொரு பணப் பரிவர்த்தனைக்கும் 15 வினாடிகள் மட்டுமே..!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் இன்று திறப்பு..!!
    1 Min Read
    தென்மேற்கு பருவமழை தீவிரம்: குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் கரைபுரண்டோடும் வெள்ளம்..!!
    1 Min Read
    அம்பேத்கரை அவமதித்ததாக லாலு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!
    1 Min Read
    குழந்தைகளின் புத்திக் கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்யும் பச்சைப் பட்டாணி!
    1 Min Read
    பூண்டு சாப்பிடுவதன் மூலம் நாம் அடையும் பயன்கள்
    1 Min Read
    கனமழை.. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு..!!
    1 Min Read
    நீலகிரியில் தற்காலிகமாக மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் ..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அதிமுக தன்னை தூயவன் போல் காட்ட முயல்கிறது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அதிமுக தன்னை தூயவன் போல் காட்ட முயல்கிறது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
அரசியல் செய்திகள்

அதிமுக தன்னை தூயவன் போல் காட்ட முயல்கிறது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

Nagaraj
Last updated: May 14, 2025 5:30 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கும் அதிமுக, தன்னை தூயவன் போலக் காட்ட முயல்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கும் அதிமுக, தன்னை தூயவன் போலக் காட்ட முயல்கிறது. முக்கியமான வழக்கில் கருத்து சொல்ல முயலும் போது நிர்வாகிகள் யாருடைய பெயரையும் பயன்படுத்தாமல் பொத்தாம் பொதுவாக ‘அதிமுக அறிக்கை’ என வெளியிட்டிருக்கிறார்கள்.

பிறகு என்ன நினைத்தார்களோ எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். ‘நடுநிலையோடு சிபிஐ. விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது’ என சொல்லியிருக்கிறார்.

அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்ததுமே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு மூடி மறைக்க முயன்றது. திமுக உள்ளிட்ட கட்சிகள், மகளிர் அமைப்புகள், மாணவர்கள் எனத் தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்த நிலையிலும் பழனிசாமி அரசு வழக்கை சிபிஐ-க்கு மாற்றவில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு பொள்ளாச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சி இரண்டு நாள் கழித்து அதாவது மார்ச் 12-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு பழனிசாமி அரசு பரிந்துரைத்தது. வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க 14-ம் தேதி அரசாணை வெளியிட்டார்கள்.

அதன்படி சிபிஐ-க்கு மாற்றினார்கள் என்றால் இல்லை. வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்காமல் இழுத்தடித்தார்கள். ”பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரிப்பது ஏன்?” என்று சென்னை உயர் நீதிமன்றம் 2019 மார்ச் 29-ம் தேதி கேள்வி எழுப்பியது. உடனே தமிழக அரசு வழக்கறிஞர் ‘வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் பணி நடக்கிறது” எனச் சமாளித்தார்.

‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் 2019 அக்டோபர் 16-ம் தேதி அறிவித்தது. இதனால்தான் வழக்கு நியாயமாக நடந்து முடிந்து, இன்றைக்குக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது. அந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதால் அதன் கறை தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சிபிஐ என்ற கேடயத்தைத் தூக்கிக் கொண்டு புனிதர் வேடம் தரிக்க முயல்கிறது அதிமுக.

”சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால் குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள்” எனப் பெருமை அடிக்கும் அதிமுக அன்றைக்கு சிபிஐ எனச் சொல்லி எப்படியெல்லாம் நாடகம் ஆடியது என்பதை மக்கள் அறிவார்கள்.

புகார் அளித்த மாணவியின் சகோதரர் பூபாலனை குற்றவாளிகள் தரப்பு தாக்கியது. வழக்கை திரும்பப்பெற சொல்லி மிரட்டியது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை எல்லாம் போட்டு அரசாணை வெளியிட்டார்கள். இவையெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பை அச்சுறுத்த அன்றைக்கு இருந்த பழனிசாமி அரசு மேற்கொண்ட அஸ்திரங்கள்.

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில், ‘வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் குறிப்பிடாத புதிய அரசாணையை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டப் பெண்ணின் பெயரைச் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பயன்படுத்திய காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரைப் பயன்படுத்தியதால் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 15-ம் தேதி உத்தரவிட்டது. இதெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பழனிசாமி ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்கள். அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக இடங்களைக் குறைக்க வாய்ப்பில்லை: செல்வப்பெருந்தகை நம்பிக்கை

தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் முழுமையாக உருவாகவில்லை: அண்ணாமலை கருத்து

அண்ணாமலை அதிமுகவை விமர்சிப்பது கட்சியின் கருத்து அல்ல: தமிழிசை திட்டவட்டம்..!!

அடுத்த மே தினம் பழனிசாமி பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் நேரு விமர்சனம்

அண்ணாமலை கருத்து விவகாரம்: தமிழிசை விளக்கம்

TAGGED:AIADMKnew government orderPolice OfficerPoliticsreportscandalsஅதிமுகஅரசியல்அறிக்கைகாவல் அதிகாரிகேவலங்கள்புதிய அரசாணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?