புதுடில்லி: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரை டங்ஸ்டன் திட்டம் முழுமையாக முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.
அரிட்டாப்பட்டி போராட்டக் குழுவினர் நேற்று , பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சென்று மத்திய அமைச்சரை டெல்லியில் சந்தித்து பேசினர்.
விரிவான ஆலோசனைக்கு பிறகு டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.