சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல மூடி மறைக்காமல் விசாரணை நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் திமுகவை சேர்ந்தவர் என தகவல் பரவி வரும் நிலையில் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.
மாணவியை பாலியல் கொடுமை செய்த நபரை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். மாணவி பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல மூடி மறைக்காமல் விசாரணை நடைபெற்று வருகிறது என அவர் பேட்டி அளித்துள்ளார்.