சென்னை: இன்று ஆலோசனைக்கூட்டம்…. பாமகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக (அன்புமணி) வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ; பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மே 19-ஆம் நாள் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸ் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையேற்கவுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.