அமெரிக்கா: அமெரிக்கா அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் உறுதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை முன்னெப்போதையும்விட சிறப்பானதாகவும், துணிச்சலானதாகவும், பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவேன் என டிரம்ப் தெரிவித்தார்.
பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் என்று உறுதி அளித்தார்.
அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை தடுத்து நிறுத்துவதுடன், வெளிநாட்டினரின் வருகையையும் கட்டுப்படுத்துவேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். பைடன் அரசால் கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்துவிதங்களிலும் தோல்வி அடைந்த அமெரிக்காவை மீட்டெடுக்க தமக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டு மக்களின் கனவை நனவாக்க தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்ததாக பைடனுக்கும் கமலாவுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.