சென்னை : பனையூரில் இருந்து வெளியே வாங்க விஜய் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எல்லோரும் எம்ஜிஆராக நினைக்கிறார்கள். ஆனால் எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என்று விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய், முதலில் களத்துக்கு வர வேண்டும் எனக் கூறிய அவர், மாநாடு, செயற்குழுவில் பேசிய இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று விஜய் நினைத்தால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல், பனையூர், செயற்குழு, விஜய், முன்னாள் அமைச்சர், விமர்சனம், Election, Panayoor, Executive Committee, Vijay, Former Minister, Review,